பயர்பாக்ஸ்க்கு தாவிவிடுங்கள்

பயர்பாக்ஸ் உலாவியில் நான் சமீபத்தில் அறியவந்த அருமையான விஷயம்




Microsoft Internet Explorer க்கு பெரும் சவாலாக விளங்கும் Mozilla Firefox, தற்போது Firefox 3 வெளிவந்து உள்ளது .PC World சஞ்சிகை Internet Explorer 6 இனை உலகின் மிகமோசமான தொழிநுட்பம் சார்ந்த தயாரிப்புகளில் 8 வது இடத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றது.
நீங்கள் இணைய உலாவரும் போது கூட அசாதாரண வேகமின்மை அல்லது எந்த error-ம் கொடுக்காமல் வெற்று பக்கத்திலேயே அரைமணி நேரமாய் நிற்றல் போன்ற அறிகுறி தெரிந்தால் ஒரு வேளை அது இணைய இணைப்பு பிரச்சனையாய் இல்லாமல் உங்கள் பிரவுசர் பிரச்சனையாய் இருக்கலாம். பயர்பாக்ஸ்க்கு தாவிவிடுங்கள்.
தமிழில் இன்னும் சில வலைப்பக்கங்கள் பயர்பாக்ஸில் ஒழுங்காய் தெரிவதில்லை. அவற்றை படிப்பதற்காக வேண்டியே IE-யை திறக்க வேண்டியுள்ளது. "Firefoxல் அனைவரது வலைபதிவும் நன்றாக தெரிய பதிவை எழுதும் போது text-align justify யை பயன் படுதாமல் இருந்தாலே போதும்."

இந்த பயர்பாக்ஸ் பிரெளசரில் அனைவரையும் கவர்ந்த விஷயம் plug-insதான். ஆயிரக்கணக்கான plug-insல்(நீட்சி) உள்ளன.




பயர்பாக்ஸ் உலாவியில் நான் சமீபத்தில் அறியவந்த ஒரு அருமையான Add-on பெயர் Piclens.
இணையதில் நீங்கள் தேடும் படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் "ஸ்லைடு ஷோ"போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது
download

ரேப்பிட்ஷேர் இணைய தளத்தை உபயோகித்திருப்போம். அதில் இலவசப் பயனர் கணக்கைத் தேர்வு செய்தோமேயானால், 50 - 60 விநாடிகள் வரை காக்க வைத்து நேரம் விரையம் செய்வார்கள். அப்படியில்லாமல், ரேப்பிட்ஷேரில் இருந்து உடனே தரவிறக்கம் செய்ய ஒரு எளிய வழி உள்ளது.
Indioss
இண்டர்நெட் பயனர்கள், மேலே உள்ள லிங்கை (Indioss) ரைட் கிளிக் செய்து "Add to Favorite" என்பதைத் தேர்வு செய்யவும். பின், ரேப்பிட் சேரில் கவுண்ட் டவுன் டைமர் ஓடும் போது, "Favorite"-ல் சென்று இந்த லிங்கைச் சொடிக்கினால், உடனே, டவுன்லோட் லிங்க் கிடைத்து விடும்.
ரொரென்ற் கோப்பொன்றினை தரவிறக்குவதாயின் Torrent client ஒன்று தேவைப்படும்.
இதற்கு தீர்வாக வந்துள்ளது தான் Firetorrent நீட்சி. இதனை நீங்கள் உங்கள் Firefox உலாவியில் நிறுவிக்கொண்டால் சாதாரணமாக ஒரு கோப்பை தரவிறக்குவது போல ரொரென்ற் கோப்புகளையும் தரவிறக்கிக்கொள்ள முடியும்.
download
தேவையில்லா தளங்களைத் திறக்காமல் எப்படித் தடுப்பது ஃபயர்பாக்ஸில் இதற்காகவே ஒரு நீட்சி உள்ளது. "FoxFilter" என்ற நீட்சி தேவையில்லா தளங்களைத் தடுத்திடும்
download
சில இணைய தளங்களைப் பார்வையிடும் போது நமக்குத் தெரியாமலேயே நமது கணினியில் வைரஸ் போன்ற சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவி விடுகின்றன. இப்படிப்பட்ட இணைய தளங்களில் இருந்து நம்மையும் நமது கணினியையும் காப்பாற்றிக் கொள்ள "Web of Trust" உதவுகிறது. இது ஃபயர்பாக்ஸின் நீட்சியாகும்(add-on). இந்த நீட்சியை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.
download

Fireuploader
Google Picasa Albums, YouTube, Facebook,Flickr and Box.net. போன்ற தளங்களில் உங்களுடைய Fileகளை Upload விரைவாக செய்யலாம்.
நீங்கள் GMailலில் கணக்கு வைத்துள்ளிர்களா
இதில் ஒரே ஒரு கிளிக்கில் நிறைய GMail கணக்குகளை Login செய்யலம்
ஒரே ஒரு கிளிக்கில் உங்களுடைய GMailன் Inboxயை ஓப்பன் செய்யலாம்
உங்களுக்கு வந்த கடைசி 10மெயில்களை பட்டியலிடுகிறது.
புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு அலார்ட் செய்கிறது
வேண்டுமென்றால் புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு ஒலி அலார்ட் செய்கிறது
நிச்சயம் உங்களுக்கு இந்த plug-ins மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
download

துரதிஷ்டவசமாக சில வளைத்தளங்கள்Internet Explorerல் மட்டும் தான் ஒழுங்காய் தெரியும். அதற்க்கான தீர்வு தான் இந்த plug-ins. பயர்பாக்ஸில் ஒரு வளைத்த்ளம் சரியாக தெரியவில்லை என்றால் Statusbarல் ஒருசிறிய ஐக்கான் இருக்கும் அதை கிளிக்கினால் பயர்பாக்ஸ் தானகவே அது அந்த வளைத்தளம் எவ்வாறு தெரியுமோ அதை பயர்பாக்ஸிலேயே பார்க்கலாம்
download
புதிய FireFox version 3 இறக்கம் download

ip2location_banner1();

track

AddThis

Bookmark and Share
Powered by Blogger.

Blog Archive